விநாயகர் சதுர்த்தி விழாவின் கொண்டாட்டங்கள்!

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

     நேபாளம், அமேரிக்கா, மொரீசியஸ், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ff93cda5bda69030ea53151819a7cb27-1

     விநாயகர் சதுர்த்தியின்போது பக்தர்கள் அனைவராலும் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு களிமண்ணால் விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் சிலை முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகிறது.

     விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள் மற்றும் மாலைகள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. விநாயகரின் நிறைவு நாளன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews