இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இன்று கடந்த மாதம் தொடங்கிய சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த மாதம் முதல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கொண்டு வருகிறது.
இதில் பஞ்சாப் மாநிலத்தை பற்றி சில பல வியக்கத்தக்க முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு இந்த தேர்தல் மிகவும் பின்னடைவாக காணப்படுகிறது.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் வெறும் 13 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாஜக ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க உள்ளதாக கருதப்படுகிறது.
இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பஞ்சாப்பில் ஆட்சியை பிடிப்பதால் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் சின்னமான துடைப்பத்துடன் டெல்லியில் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடிகர் சோனு சூட் பின் சகோதரி தேர்தலில் களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் அவருக்கு பெரும் பின்னடைவு நிலவி கொண்டு வருகிறது. அதன்படி பஞ்சாப் மாநிலம் மோகா தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் சகோதரி மாளவிகா பின்னடைவில் உள்ளார்.