
Entertainment
ரொமாண்டிக் லுக்! ஜாலியாக ஹனிமூன் கொண்டாடும் விக்கி – நயன்;;
பாலிவுட், கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்நிலையில்திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து மற்றும் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
இருப்பினும் கோவிலுக்கு சென்று வரும் நயன் விக்கிக்கு எப்போது ஹனிமூன் என அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில் தங்களுடைய ஹனிமூனை விக்கி – நயன் தாய்லாந்தில் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து நடிகை நயன்தாரா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
