அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி! உள்ளாட்சிகளில் பறக்கும் படை அமைத்திடுக-மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் தமிழகத்தில் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறுள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் என்றாலே பல இடங்களில் தேர்தல் பறக்கும் படை மிகத் தீவிரமாக தங்களது பணிகளில் ஈடுபடுவர். தேர்தல் ஆணையமும் அடுத்தடுத்த புதிய விதி முறைகளையும் அறிவிப்புகளையும் அறிவித்துக் கொண்டே வரும்.

இந்த சூழலில் நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி அனைத்து வாக்குச் சாவடிகளில் சிசிடிவி பொருத்த மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து உள்ளாட்சிகளில் கண்டிப்பாக பறக்கும்படை அமைத்திட அறிவுறுத்தல் செய்துள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முடித்து தயாராக இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment