Connect with us

அரசு பள்ளிகளில் CCTV கேமராவா? – இது வேற லெவலா இருக்கே!!

சிசிடிவி கேமரா

செய்திகள்

அரசு பள்ளிகளில் CCTV கேமராவா? – இது வேற லெவலா இருக்கே!!

குழந்தைகள் படிப்பதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக டெல்லி அரசு பள்ளிகளில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் ஆட்சி அமைந்தது முதல் டெல்லி மாடல் என தங்களுக்கே உரிய பாணியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கவனம் ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் டெல்லி மாடல்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளை பின்பற்ற தமிழகம் உட்பட பல மாநிலங்களும் முன்வந்திருப்பதற்கு காரணமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

இந்த சூழலில் திறம்பட செயல்படும் டெல்லி அரசு பள்ளிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்ததை போல விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டத்தின் மூலம் வகுப்பறையில் தங்களுடைய குழந்தைகள் பாடம் கற்கும் முறைகளை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top