விடுதலை படப்பிடிப்பில் விபத்து: ஒருவர் பலி.!

சென்னையில் விடுதலை படப்பிடிப்பில் ரோப் அறுந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை. இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதால் இறுதிகட்ட படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை கேளம்பாக்கத்தில் விடுதலை படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய போது ரோப் அறுந்தி விழுந்ததில் சுரேஷ்  படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதன் காரணமாக அவரை மீட்ட படக்குழுவினர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இத்தகைய தகவலானது  விடுதலை படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.