அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம்.. இனிமேல் தமிழே கிடையாதா?

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதனால் இனி பள்ளிகளில் தமிழ் பாடம் இருப்பது சந்தேகம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை தமிழக பாட திட்டம் பின்பற்றப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் பாடத்திட்டம் அம்மாநிலத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுச்சேரியில் புதிய பாட கல்வித்திட்டம் ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

cbse

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளதால் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழ் பாடமே மாணவர்களுக்கு இருக்காது என்றும் இதனால் மாணவர்கள் தமிழ் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆட்சிதான் நடக்கிறது என்றும் அவரது ஆட்சியில் தமிழ் மெல்ல அழிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் புதுவை முதல்வர் ரங்கசாமி நினைத்ததை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.