சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வு எப்பொழுது??

நடுவண் இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் இந்த தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும்  குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும் துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணை தேர்விற்கான கால அட்டவணை சிபிஎஸ்இ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் துணை தேர்வானது ஜூலை மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும் தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இந்த துணை தேர்வினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

துணை தேர்விற்கான கால அட்டவணையை https://www.cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews