Connect with us

சிபிஎஸ்சி பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு!

News

சிபிஎஸ்சி பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு!

bbd4d5bf72beae205750431c23257e20-1-2

சிபிஎஸ்இ பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு ரத்து என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சிபிஎஸ்சி பிளஸ் டூ மதிப்பெண் கணக்கிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது

இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின்படி மதிப்பெண் கணக்கிடும் பணி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஎஸ்சி பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அல்லது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் சென்று மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் இந்த மதிப்பெண்களில் திருப்தியில்லாத உள்ளதாக தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top