சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 3வது இடம்பிடித்த சென்னை மண்டலம்!!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் நடைப்பெற்றது. இந்த தேர்வு முடிவுக்காக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காத்திருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் நாடு முழுவதும் 92.71% மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் 98.83% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.  பெங்களூரு மண்டலம் 98.16% தேர்ச்சியுடன் இராண்டமிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 97.79% தேர்ச்சியுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பள்ளிக் குறியீட்டினைக் கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.