News
+2 தேர்வு, நாளை விசாரணை: மாணவர்களுக்கு வெற்றி கிடைக்குமா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து என பிரதமர் மோடி அறிவித்தார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதும் இந்த குழு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது
இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் தேர்வு செய்த முறை தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிபிஎஸ்சி மாணவர்கள் பதிவு செய்த வழக்கில் பிளஸ்-2 சிபிஎஸ்சி தேர்வு நடத்த வேண்டும் என்றும் டபுள் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் பிளஸ் 2 தேர்வை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்ளுமா? சிபிஎஸ்சி மாணவர் தேர்வு நடத்த உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
