10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை என்றும் நேரடியாக முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று மாலை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்த அட்டவணை இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது அல்ல என்று கூறிய சிபிஎஸ்இ நிர்வாகம் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக முதல் பருவத்தேர்வு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதி தேர்வு தொடங்கும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை இதோ:

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment