
Tamil Nadu
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அதிரடி ரெய்டுகாட்டிய சி.பி.ஐ!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அதிரடி ஆய்வுல் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக டெல்லி, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சென்னையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் புதிதாக ஒரு வழக்கு சிபிஐ பதிவு செய்திருப்பதாகவும் சிதம்பரம் மீதும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் மீதும் பதிவுசெய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே பா.சிதம்பரம் மீது முறைகேடு வழக்கில் ஈடுப்பட்டு 2019- ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு அதன் பிறகு வெளியில் வந்துள்ளார். இந்த சூழலில் மீண்டும் ஒரு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்.
மேலும், இந்த மோசடி பின்னணியில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
