Connect with us

புதிய மதுக்கொள்கை முறைகேடு: முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை!!

Capture 36

செய்திகள்

புதிய மதுக்கொள்கை முறைகேடு: முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை!!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த புதிய மது கொள்கையில் முறைக்கேடு நடைப்பெற்று இருப்பதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே அரசு ஏற்றுவந்த மதுகொள்கைகளை எதற்காக தனியாருக்கு வழங்கப்பட்டது என்றும் இதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இத்தகைய சூழலில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார்.

அதன் படி, சோதனை நடைப்பெற்று வருகிறது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் சிபிஐ சோதனையை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உண்மைத்தன்மை விரைவில் வெளிவரும் என கூறியுள்ளார். இதுப்போன்ற சோதனைகளால் நாடு இன்னும் முன்னேறவில்லை என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top