பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை!!

பழவூரில் இருந்து 5 சிலைகள் விவசாய நிலத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக டி.எஸ்.பி காதர் பாஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் கதர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் பொன். மாணிக்கவேல் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்யததாக மனுவில் காதர் பாஷா தெரிவித்து இருந்தார்.

அலர்ட்! 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில்… வானிலை அப்டேட்!!

இதனால் விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கடந்த ஜூலை 27-ம் தேதி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு தொடரப்பட்டது.

நவம்பர் 9-ம் உருவாகும் காற்றழுத்தம்… இந்திய வானிலை மையம் புதிய தகவல்!

இந்த சூழலில் யார் மீது தவறு இருப்பது குறித்து கண்டுப்பிடிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment