News
சாத்தான்குளம் விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு இன்னும் பரபரப்பாகி உள்ளது
சாத்தான்குளம் சம்பவத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து அதன்பின் சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தற்போது களத்தில் இறங்கியுள்ள சிபிஐ முதல்கட்டமாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு சாத்தான்குளம் விரைகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. ஏற்கனவே 5 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்றும் ஐந்து பேரை கைது செய்தது. ஆனால் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளிவந்துள்ளது
