News
சாத்தான்குளம் கொலை வழக்கு: முதல் குற்றவாளியை அறிவித்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையாக இந்த வழக்கு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிசிஐடியிடம் இருந்து இந்த வழக்கை கைப்பற்றிய சிபிஐ தற்போது அதிரடியாக விசாரணை செய்து வருகிறது. முதல்கட்டமாக இந்த வழக்கை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளது
மேலும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் என்பவர் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டு உள்ளார் என்றும் நான்காவது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது
சந்தேக மரணமாக இருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
