ஆன்லைன் சூதாட்டம்.. விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என சட்ட மசோத நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதால் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தினை கையில் எடுத்துள்ளனர். அதே சமயம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, ட்ரீம் 11, லுடோ, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் படி, 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.