
தமிழகம்
பொதுக்குழு விவகாரம்: ஈபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஈபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில் ஜூன் 11-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். குறிப்பாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் நிலவிவந்தது.
அதோடு சமீபத்தில் ஓபிஎஸ் தரப்பில் ஈபிஎஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டதும், அதே போல் ஈபிஎஸ் தரப்பில் ஓபிஎஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஈபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
