காவிரி பிரச்சனை- உச்சநீதிமன்ற தீர்ப்பு

நூற்றாண்டு கால வரலாறு கொண்ட காவிரி பிரச்சனை – இரு மாநிலங்களுக்கான  நதிநீர் பங்கீடு குறித்து நாளை(பிப்-16-2018) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

தப்பிக்குமா தமிழ்நாடு?

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டப்போது அதை எதிர்த்து 4 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கை நீதிபதி தீபக்மிஸ்ரா உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள நீதிபதியான அமிதவராய்  பிப்ரவரி 23ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அதனால் நாளை(பிப்-16-2018) தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அறிகிறோம்.

இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் தண்ணீர் கிடைத்து தப்பிக்குமா அல்லது வறட்சியின் பிடிக்கு ஆட்படுமா என்பதை தீர்ப்பு வெளியான பிறகே அறிய முடியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment