Connect with us

காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகம்..!! தமிழகத்தை வச்சு செய்யும் கர்நாடகா?

காவிரி

செய்திகள்

காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகம்..!! தமிழகத்தை வச்சு செய்யும் கர்நாடகா?

தேவைப்படும் நேரத்திற்கு தண்ணீரை திறந்து விடாமல் மழைக்காலத்தில் தண்ணீரை அதிகளவு திறந்து விட்டுள்ளது கர்நாடகா. இது நம் தமிழக மக்கள் இடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

ஏனென்றால் காவேரி ஆற்றில் தற்போது நீர் திறப்பானது ஐம்பதாயிரம் கன அடியை தாண்டியதாக தெரிகிறது. பொதுவாக தமிழக அரசு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கையை வைக்கும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டு வருவதால் தண்ணீரின் தேவை சற்று குறைந்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களிடையே நீர் திறப்பை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்தின் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியை தாண்டி உள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 52,723 கன அடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணையில் இருந்து 26 ஆயிரத்து 583 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 26 ஆயிரத்து 140 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top