கொள்ளிடத்தில் கலக்கும் காவிரி! கொள்ளிட ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்றைய தினம் காலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் மேட்டூர் அணை மற்றும் காவேரி ஆறு பற்றி சில முக்கிய அறிவிப்புகளை கூறி இருந்தார். அதன்படி காவிரி ஆற்றில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

காவிரி

மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில்  காவிரி ஆறு நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு மாற்றப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி காவிரி நீரானது கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது ஏனென்றால் திருச்சியில் வெள்ள சேதத்தை தவிர்க்க காவிரி நீரானது  இவ்வாறு திருப்பி விடப்படுவதாக கூறப்படுகிறது.

உய்யகொண்டான்  வாய்க்காலில் நீர் வரத்து அதிகரிப்பால் முக்கொம்பு அணைக்கு வரும் காவிரி  நீர் திருப்பி விடப்படுகிறது. முக்கொம்பு அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் இன்று மாலை 6 மணிக்கு கொள்ளிடத்திற்கு திருப்பப்படுகிறது.

இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரையோர மக்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment