Connect with us

பிக் நியூஸ்!! காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு!

Cauvery

Tamil Nadu

பிக் நியூஸ்!! காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு!

நாளை மறுநாள் நடைபெற இருந்த காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தற்போது ஒத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருக்கும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் தமிழகத்திற்கு எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்பதும் அதே போல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் பங்கீடு கொடுக்க வேண்டும் போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு வற்புறுத்தியது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தமிழக முதல்வர் கடிதம் எழுதினார்.

இந்த சூழலில் நாளை மறுநாள் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top