வாழைப்பழம் சாப்பட்டால் சளி பிடிக்குமா? உண்மை என்ன?

வாழைப்பழம் சாப்பட்டால் சளி பிடிக்கும் என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை அதிகமாக தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சாப்பிட்டால் சளியைத் தருவதில்லை, அதற்கு மாறாக முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியில் கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. நமது அன்றாட உணவில் ஒரு வேளை வாழைப்பழத்தை உணவாக உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் உள்ள 75 % தண்ணீர், அதன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% நமது உடலுக்கு எளிதாக கிடைக்கிறது. இதில் எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் வெளிப்புற தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு தான் வாழைப்பழம்.

Red Banana

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், உப்பு குறைந்த அளவிலும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த காரணமாக அமைகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் மிக சிறந்த ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நமக்கு என்றும் தொல்லை கொடுக்காது.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் இது குறைகின்றது. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது. நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம் மிக பெரிய பங்கு வகிக்கிறது.வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவுக்கிறது. கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

bananas

“வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்து எடுத்து கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, இதனால் 40 % குறைக்க முடிகிறது”. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் புண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது. வாழைப்பழத்தை உற்பத்தி செய்ய முடியாத சில நாடுகள் கூட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இதை பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அறியாமல் அதனை உதாசீனப்படுத்துகிறோம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment