தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் பூனை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..

மச்சி வெயிட் அதிகமாகிடுச்சு நான் ஜிம்முக்கு போய் உடம்ப குறைக்க போறேன், சிக்ஸ் பேக் வைக்க போறேன்னு உங்க பிரண்ட்ஸ் சொல்லி கேட்ருப்பீங்க ஏன் சிலர் ஜிம்முல போய் ஒர்க் அவுட்டும் பண்ணிருப்பாங்க. ஆனா ஒரு பூனை வெயிட் அதிகமாகிடுச்சுனு ஜிம்முல ஒர்க் அவுட் பண்ணி பார்த்திருக்கீங்களா?

அட நிஜமா தாங்க. மனுஷங்க கூட இந்த அளவுக்கு தீவிரமா ஒர்க் அவுட் பண்ண மாட்டாங்க. ஆனா அந்த பூனை மனுஷங்களுக்கே சவால் விடும் அளவுக்கு ஜிம்முல போய் தீவிரமா ஒர்க் அவுட் பண்ணுதுங்க. இப்போ இந்த வீடியோ இணையதளங்களில் மிகவும் வைரலா பரவிட்டு இருக்கு.

ஆனா இந்த சம்பவம் நம்ம நாட்ல நடக்கலைங்க. சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள ஜிம்முல தாங்க அந்த பூனைக்குட்டி ஒர்க் அவுட் பண்ணுது. அங்க உள்ள ஜிம் ஒன்றில் தினமும் வந்து சிட் அப் செய்து அசத்தும் பூனைக்குட்டியின் வீடியோவை அதன் உரிமையாளர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த காலத்துல மனுஷங்களே அவங்க ஹெல்த் மேல அக்கறை இல்லாம பாஸ்ட் புட் அது இதுனு சாப்பிட்டு தொப்பைய வச்சிட்டு இருக்குற சமயத்துல ஒரு பூனை ஜிம்முல சிட் அப் செஞ்சு தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பதை பலரும் நகைச்சுவை கலந்து பாராட்டி வருகிறார்கள்.

ரொம்ப நாளாவே இல்ல ரொம்ப வருசமாவே ஜிம்முக்கு போகனும் உடம்ப குறைக்கனும்னு உதார் விட்ற உங்க பிரண்ட்ஸ் கிட்ட இந்த நியூஸ் ஷேர் பண்ணி இதவிட வேற அசிங்கம் எதுவும் இல்லடானு சொல்லி உடனே ஜிம்முக்கு போக சொல்லுங்க.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment