Connect with us

சாதி பெயர்கள் நீக்கம்: தமிழக அரசு அதிரடி!

Tamil Nadu

சாதி பெயர்கள் நீக்கம்: தமிழக அரசு அதிரடி!

8ea9ca7d0751c6a6751bfd397e86d127

தமிழ்நாடு பாட நூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

குறிப்பாக தமிழ்த் தாத்தா உவே சாமிநாத ஐயர் என்ற பெயரில் இருந்த ஐயர் என்ற சொல் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாட நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சாதியை குறிப்பிடும் வகையில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்கள் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது 

12ஆம் வகுப்பு தமிழ் பாட நூலில் பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் உவே சாமிநாத ஐயர் எழுதிய பாடம் ஒன்று புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடத்தை எழுதிய எழுதியவர் வே சாமிநாதர் என்று மட்டுமே தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெயரில் உள்ள அய்யர் என்ற சாதி நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று இருந்த பெயரிலுள்ள பிள்ளை என்பதை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top