கமலஹாசன் தோல்விக்கு ஜாதியும் ஒரு முக்கிய காரணம் என அவருடைய சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் அவரது கட்சியினரும் தோல்வியடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதியிலும் அவர் தோல்வி அடைந்தார்
இந்த நிலையில் கமல்ஹாசன் தோல்வி குறித்து அவரது சகோதரர் சாருஹாசன் கூறியபோது ’கமல்ஹாசன் தோல்விக்கு ஜாதியும் ஒரு காரணம் என்றும் இனி தமிழ்நாட்டில் பிராமணர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் இது திராவிட நாடு என்றும் அவர் கூறினார்
மேலும் கமல்ஹாசன் தோல்வி தங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் வெற்றி தோல்வியை சகஜமாக நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனை முதலில் ஒரு நடிகராகவே இன்னும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பின்னர் எப்படி அவரை அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அதேநேரத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தாலும் கண்டிப்பாக அவர் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிவாஜிகணேசனின் தோல்வியை விட கமல் தோல்வி பெரிது இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல் வலுக்கட்டாயமாக அரசியலில் ஈடுபட்டார் என்றும் அது கமல்ஹாசனின் தவறு இல்லை என்றும் அவரை திணித்தவர்களின் தவறு என்றும் சாருஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்