Connect with us

தாயை அடைத்து வைத்து… மண் சாப்பிட வைத்த மகன்கள் மீது வழக்குப்பதிவு!

WhatsApp Image 2022 04 15 at 9.22.56 PM

செய்திகள்

தாயை அடைத்து வைத்து… மண் சாப்பிட வைத்த மகன்கள் மீது வழக்குப்பதிவு!

தாயை அடைத்து வைத்து… மண் சாப்பிட வைத்த மகன்கள் மீது வழக்குப்பதிவு!

அரசு வேலையில் இருந்த மகன்கள் கைவிட்ட நிலையில் மண்ணை உண்டு வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு நிலையில், அவரை பராமரிக்காமல் கைவிட்ட மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி ஞான ஜோதி, வீட்டிலேயே அடைக்கப்பட்டிருந்த நிலையில், பட்டினியால் மண்ணை உண்ணும் காட்சிகள் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூதாட்டியின் மகன் சண்முக சுந்தரம் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், மற்றொரு மகன் வெங்கடேஷன் பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது. இரு மகன்களும் அரசு வேலையில் நல்ல சம்பளம் பெற்று வரும் போதும், மூதாட்டியைக் கவனிக்காமல் விட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டாக மகன்கள் இருவரும் மூதாட்டியை வீட்டிற்குள்ளே அடைத்து வைத்திருப்பதாகவும், வாரந்தோறும் பிஸ்கட்களை வீசிச் செல்வதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மூதாட்டியின் மகன்கள் சுந்தரம் மற்றும் வெங்கடேஷன் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top