Connect with us

வசமாக சிக்கிக்கொண்ட ஜி.பி.முத்து,“பைக்கர்” டிடிஎப் வாசன் மீதும் வழக்கு பதிவு

GP Muthu

தமிழகம்

வசமாக சிக்கிக்கொண்ட ஜி.பி.முத்து,“பைக்கர்” டிடிஎப் வாசன் மீதும் வழக்கு பதிவு

கோவை “பைக்கர்” டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து, ரைடு செல்வது போன்றவற்றை விடியோவாக பதிவு செய்து, தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறது.

அன்மையில் டிடிஎப் வாசன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வந்தது தொடர்பாக போலீசார் எச்சரித்து அனுப்பினர். அப்போது அதிகளவு இளைஞர்கள் கூடி மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையில் டிடிஎப் வாசன், மற்றொரு யூ.டியூப்பர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஜி.பி.முத்து ஹல்மட் அணியவில்லை. இந்த விடியோ டிடிஎப் வாசன் தனது யுடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி மாநகர பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்குதல், ஹல்மட் அணியாமல் சென்றது. ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top