
தமிழகம்
ஆசை யாரை விட்டது..; அளவுக்கு மீறிய கந்துவட்டி-6 பேர் மீது வழக்குப்பதிவு..!!
நம் தமிழகத்தில் ஆங்காங்கே அரசுக்கு தெரியாமல் கந்துவட்டி ஆனது நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இந்த கந்து வட்டி மற்றும் அளவுக்கு மீறிய வட்டியின் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் ஆங்காங்கே ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைத்து கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் அளவுக்கு மீறி வட்டி வசூலித்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டையில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 லட்சம் ரூபாய் வரை வட்டி வசூலித்த 6 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
சின்னப்ப நகரை சேர்ந்த இந்திரா, மகள் பூப்ண்டி, மகன் மணிகண்டன், அசோக் நகர் ராதா, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜபுரம் ஹரி மனைவி சித்ரா மீதும் கந்துவட்டி தடை சட்டத்தில் கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஏற்கனவே கந்து வட்டி தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கிறார் இந்திரா என்பதும் குறிப்பிடத்தக்கது. கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயன்ற சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அனிதா தந்த புகாரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
