
தமிழகம்
கோட்டை முற்றுகை போராட்டம்: அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு !!
பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காத மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்றைய தினத்தில் மாபெரும் போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டமானது கோட்டையை நோக்கி முற்றுகைப்போராட்டம் என்ற அடிப்படையில் சுமார் 5000 பேர் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையினை குறைக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் காவல்துறையினரின் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் கலந்துகொண்டதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு உத்தரவை மீறி செயல்படுவது அதே போல் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் என்ற அடிப்படையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆர்பாட்டம் மட்டும் நடத்தி இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்காது என்றும் ஆனால் கோட்டையை நிறுத்தி முற்றுகைப்போராட்டம் நடத்தி பேரணியாக சென்றதால் இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
