நிலம் வாங்கியதில் 3 கோடி மோசடி! 3 பேர் மீது வழக்கு பதிவு!!

94ee517b855b461d4bdd6c9827794250-1

தற்போது நம் தமிழ்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் தொழில் என்றால் அதனை புரோக்கர் என்றே கூறலாம் அந்த வழியே நிலம் குத்தகை மற்றும் நிலம் விற்பனை போன்ற தொழில் தற்போது தமிழகத்தில் தலைதூக்கி காணப்படுகிறது. மேலும் பலரும் இதிலேயே மிகவும் ஆர்வமாக இறங்கி வேலை செய்கின்றனர் ஏமாற்றுக்காரர்கள் அவ்வப்போது மக்களை பணத்தை வாங்கிகொண்டு அவர்களை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருக்கு நிலத்தை  விற்பனை செய்வதும் காணப்படுகிறது மேலும் ஒரு சில கூட்டத்தார் அனைத்து தரப்பினரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு காலி செய்து மக்கள் பணத்தை திருடி சென்றிருந்தனர்.8144e0d3db907639b66cd2793e12bf60-1

இவை நம் தமிழகத்தில் அதிகமாக நடைபெறுகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த படி புதுக்கோட்டை மாவட்டத்தில் குழிறையில் 3 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றிய மூன்று பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு மூன்று லட்சம் முன்பணம் மட்டுமே தந்து முழுத் தொகையை தராததால் நில உரிமையாளராக காணப்பட்ட அடைக்கலம்மாள்   என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ள புகார் அளித்துள்ளார்.

மேலும் அடைக்கலம்மாள்  புகாரில் ராஜமாணிக்கம் ஜெயக்குமார் பாரதிதாசன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment