தீண்டாமை கொடுமை: புதுக்கோட்டையில் 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிவயல் ஆதிதிராவிடர் பகுதியில் திடீரென 4 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தேகமடைந்த கிராம மக்கள் தண்ணீர் தொட்டிக்குள் சென்று பார்த்தனர். அப்போது தண்ணீரில் மனித மலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதன் காரணமாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதில் சலசலப்பை கிளப்பிய நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

அப்போது பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது வேங்கிவயல் கட்டுப்பாடாக இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் ஆதிதிராவிடர் மக்களை சாமி கும்மிட அழைத்து சென்றார். அப்போது சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் என்பர் இழிவாக பேசியுள்ளார்.

அதே போல் அங்குள்ள டீக்கடையில் 2 டீ குவளை முறையை கடைப்பிடித்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கடையின் உரிமையாளர் மூக்கையா மற்றும் சிங்கமாள் ஆகியோர் மீது போலீசார் ST/SC வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.