Connect with us

15 திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு! புகார் கொடுத்த தேர்தல் அதிகாரி;

dmk admk

Tamil Nadu

15 திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு! புகார் கொடுத்த தேர்தல் அதிகாரி;

15 திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு! புகார் கொடுத்த தேர்தல் அதிகாரி;

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 4ஆம் தேதி தமிழகத்தில் மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றிய தகவலே அதிகளவு வெளியானது. அதிலும் பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இருப்பினும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வந்தது. அதன் ஒரு கட்டமாக தற்போது 15 திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி சேர்ந்த 8 அதிமுக, 7 திமுக கவுன்சிலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி புகாரின்பேரில் போத்தனூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில் 15 அதிமுக திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top