10 ஆண்டுகளாக ‘ஓவர் ‘டார்ச்சர்..! தமிழ் ஆசிரியர் மீது வழக்கு பதிவு ;;

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் இருக்கும் தமிழ் ஆசிரியர் 10 ஆண்டுகளாக மாணவியர்களிடன் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காது மற்றும் வாய் பேசாத சங்கத்தை சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தாங்கள் கொடுத்த புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க கோரி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளி வளாகத்தின் மீது போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது தமிழ் ஆசிரியர் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தை கூறினர். உடனடியாக தமிழ் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் புகார்கள் அடுத்தடுத்து தொடங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில் மானாமதுரையில் நடைப்பெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment