தீண்டாமை வழக்கு; 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

தென்காசி அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த வழக்கில் 2 பேருக்கு ஜானிம் மறுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பஞ்சான் குளம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் பள்ளியில் பயிலக்கூடிய சிறுவர்கள் தின்பண்டங்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடை உரிமையாளர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதோடு உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதன் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ராமச்சந்திரன், சுதா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.

ஆடையின்றி வீடியோ கால்.. மடாதிபதி தற்கொலையில் திடீர் திருப்பம்!!

அப்போது 2 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதோடு கடையின் உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment