மாணவி கீழே விழுந்த வழக்கு: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அக்டோபர் 17-ம் தேதி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த 11-ம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது மாணவிக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பள்ளி தாளாளருக்கு தொடர்பு கொண்டபோது கனமழையின் காரணமாக விடுதியின் தரை வழங்கியதாகவும் இதனால் மாணவி கீழே விழுந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

அதேசமயம் மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது 2-வது மாடியில் இருந்து குதித்ததாக, பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவியின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் காவல்துறையினர் விரிவான பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.