Connect with us

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு-லஞ்ச ஒழிப்பு போலீசார்;

kamaraj

தமிழகம்

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு-லஞ்ச ஒழிப்பு போலீசார்;

இன்று தினம் காலையில் அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆன காமராஜரின் சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக அவருக்கு சொந்தமான 49 வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் மட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காமராஜ் மகன்களின் இனியன், இன்பன் திருவாரூரை சேர்ந்த சந்திரசேகர், திருமூர்த்தி, உதயகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015 முதல் 2021 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58.44 கோடி சொத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மட்டுமின்றி சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top