சொத்து பிரச்சினை..! நடிகர் சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!!

தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம் சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த சிவாஜி கணேசனின் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படவில்லை என்றும் குறிப்பாக வீடுகளின் வாடகை பாக்கி என்பது தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று அவர்களுடைய மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் சொத்துக்களை தங்களுக்கு சமமாக உரிமை இருப்பதால் தங்களுக்கும் உரிய சமமான பங்கு வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது இன்று வந்தது. அப்போது சிவாஜி மகள்கள் மீது வாதாடிய வழக்கறிஞர் 1999-ல் எழுதப்பட்ட உயில் என்பது 2021-ஆம் ஆண்டுதான் வெளிவந்ததாக கூறினார்.

அதில் தங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டு இருப்பதாகவும், இந்த உயிலை மெய்பிக்கும் வகையில் தற்போது நிழுவையில் இருப்பதாக குறிப்பிட்டார். சிவாஜி கணேசன் இறந்த பிறகு வந்த உயிலானது ஜோடிக்கப்பட்டது என வாதிட்டார்.

இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி நடிகர் பிரபுவுக்கு எதிரான சகோதரிகள் மனுக்களை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.