16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஷங்கரின் மருமகன்: காவல்துறை வழக்குப்பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் மருமகன் ரோஹித் தாமோதரன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர்கள் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுச்சேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தாமோதரன் உள்பட ஐவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print