#Breaking : எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!!!
சொத்து வரியை கண்டித்து திருச்சியில் நேற்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி போன்ற முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது திருச்சி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, சொத்து வரி உயர்வு , பாலியல் வன்கொடுமை , திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது போன்றவைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், பொதுப்பாதையில் கூடுவதற்கு தடை, பொது பணியாளர்கள் கூறும் உத்தரவை மீறி நடப்பது உள்ளட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்கள் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
