போக்குவரத்து இடையூறு!! டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு..!!!!

சமூக வலைதளங்களில் ஒன்றாக கருதப்படும் யூடியூபில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து வருபவர் யூ டியூபர் டிடிஎஃப் வாசன். இவருக்கு 2 கே கிட்ஸ் என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்றே கூறலாம். குறிப்பாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுடம் பைக் சாகசம் செய்த காரணத்தினால் போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் 2 பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த சில மணி நேரம்… 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் செந்தில் செல்வம் என்பவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக கடலூர் அடுத்த புதுப்பாளையத்தில் வருகை தந்திருந்தார். அப்போது யூ டியூபர் டிடிஎஃப் வாசனை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!!

அதே சமயம் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தினர். 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் சாவிகளை கைப்பற்றினர். தற்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.