
பொழுதுபோக்கு
விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!!
நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாக கூறினார்.
அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தபோது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியது மட்டுமல்லாமல் தனது சாதியை பற்றி தவறாக பேசியதாக தெரிவித்தார்.
அதே போல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற பிறகு அவருடைய மேலாளர் ஜான்சன் என்பவர் தாக்கியதாக கூறிய அவர் உண்மை சம்பவம் இவ்வாறு இருக்க மறுநாள் சோஷியல் மீடியாவில் தான் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று அமலுக்கு வந்தது. அப்போது விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
