தியேட்டருக்கு எதிராக மனு! தள்ளுபடி செய்து உத்தரவு! மகிழ்ச்சியில் உரிமையாளர்கள்!!

திரையரங்கு

தமிழகத்தில் தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் காட்சிகள் வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன.

தியேட்டர்

இதற்கு எதிராக  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இதனால் கடந்த தீபாவளி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஏராளமான கூட்டங்கள் வந்தன.தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் வழக்கு தொடுத்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதித்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர் புகார் அளித்திருந்தார்.

ஆனால் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.ஏனென்றால் கடந்த சில வருடங்களாக திரையரங்கங்கள் கூட மூடப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு முழு இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது பெரும் லாபகரமாக அமைந்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print