அடுத்த சிக்கல்? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் தமிழக ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றதில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிரச்சனைக்குறிய நபராக இருந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சி!! பச்சிளம் குழந்தையின் உடலை கடித்து குதறிய தெருநாய்கள்!!

அதே போல் பொது நிகழ்ச்சிகளில் தனாதர தர்மம் குறித்து பேசுவதாகவும் கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆரோவில் தலைவர் என்பது சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை பெறக்கூடியவை என்றும் அரசியல் சாசனத்தின் படி, இத்தகைய பதவியை ஆளுநர் ஏற்று இருக்க கூடாது எனவும் இதனை மீறி பதவி ஏற்றதாழ் ஆளுநர் பதிவியின் தகுதியை இழந்துவிட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் அதிர்ச்சி! மூதாட்டி மீது விழுந்த கட்டிடம்..!!!

இந்த சூழலில் எந்த தகுதியின் அடிப்படையில் தமிழக ஆளுநராக நீட்டிக்கிறார்? என்று விளக்கம் கேட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசனின் மனுவானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.