இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு!!!

தற்போது உலக கோப்பைக்கான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்திலேயே இந்தியாவை எந்த ஒரு விக்கெட்டுகள் இழப்பில்லாமல் வெற்றி பெற்றது.யோகி ஆதித்யநாத்

அதன் பின்னர் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து மோதியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் போராடி இறுதியில் வெற்றியை பெற்றது. இது பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஏனென்றால் உரிமை பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும். இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினார்கள். இவ்வாறு கொண்டாடிய ரசிகர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அடைந்த வெற்றியை கொண்டாடாமல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியடைந்ததை உத்தர பிரதேச  மாநிலத்தில் கொண்டாடியதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் வெற்றியினை கொண்டாடியவர்களுக்கு உத்தர பிரதேச  மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவற்றை கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment