அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு மனு தாக்கல்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது வழக்க தொடரப்பட்ட நிலையில், விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக சென்னை டிஜிபி-யிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, வழக்கானது சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த சூழலில் மனு மிதான விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளதாக வாதாடினார்.

அதே சமயம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.