Connect with us

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு: பச்சைக்கொடி காட்டிய ஐகோர்ட்!!

150349 court chennai

தமிழகம்

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு: பச்சைக்கொடி காட்டிய ஐகோர்ட்!!

கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு கோவையில் அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து அமைச்சர் கே.என்.நேரு புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த சூழலில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை என நீதிபதி கூறினார்.

அதே சமயம் வேலுமணி குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேச்சானது அவதூறு விளைவிக்கும் வகையில் இல்லையென கூறினார். இதன் காரணமாக அவதூறு வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top