மணிரத்னம் மீது வழக்கு: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் உயிரிழப்பா?

e6654347a6fbeff7570a120434051a3d

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

கடந்த மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அப்போது ஒரு குதிரை விபத்து காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிகிறது 

இதனை அடுத்து தெலுங்கானா மாநில போலீசார், மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விலங்குகள் நலவாரியம் விசாரணை செய்யவும் காவல்துறை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏராளமான குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றின் ஒரு குதிரை விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.