ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு: இன்று தீர்ப்பு!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆதாயம் தரும் இரட்டை பதவி வசிப்பதால் ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக இருக்கிறார். இதனால் எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார்? என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு: இன்று தீர்ப்பு!!

இந்த வழக்கில் தமிழக ஆளுநர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றதில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி பிரச்சனைக்குரிய நபராக இருந்து வருகிறார். அதன் படி, பொதுநிகழ்ச்சிகளில் தகுதி தராதரம் பற்றி பேசி வருவதாக மனுவில் குற்றச்சாட்டி இருந்தார்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை பெறக்கூடியவை என்பதனால் ஆரசியல் சாசனத்தின் படி, இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநர் இரட்டைப் பதவி வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் கிடைக்குமா? – அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

இந்த பதவியை அவர் ஏற்று இருக்க கூடாது என்றும் அதனையும் மீறி ஏற்றுக்கொண்டாதால் தமிழக ஆளுநராக இருப்பதற்கு தகுதி இழந்து விடுகிறார் என்று வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.